புரோகர் வந்து போட்டோ குடுத்துட்டு போனாரு ... பையன் பேரு சிபியாம் பெங்களூர்ல வேலை செயுறதா சொன்னாரு! அம்மம்மாக்கு தெரிஞ்ச குடும்பம்னு சொன்னாங்க அப்பா போட்டோ கொண்டுவது குடுத்து பாக்கச் சொன்னாரு.."பயன் நல்லா ஸ்மார்ட்டா இர்ருக்கான்ல மா?"... எனக்கு ஒரே வெக்கம் வெக்கமா வந்தது!
ரெண்டுநாளைக்கு அப்புறம் நானு அப்பா அம்மா எல்லோரும் கோவிலுக்குக் போயிட்டு இர்ருந்தப்போ ப்ரோகர் போன் பண்ணி பொண்ணு பார்க்க வர்றதா சொல்லவும் அப்பா என்கிட்டே திரும்பி என்னமா வரசொல்லிரலாமானு கேட்டாரு...கொஞ்சம் சந்தோசமாவும் நிறைய பயமாவும் இருந்தது...அப்புறம் அப்பாவே அவங்ககிட்டே "இப்போ கோயிலுக்குப் போயிட்டு இர்ருகோம் நாளைக்கு காலைலே வரச்சொல்லுங்களேன்" அப்புடீன்னு சொல்லிடாரு!
கோவிலுக்குப் போனதும் நான் சாமிகிட்டே வேண்டினது ஒண்ணுதான் வர்ரவருக்கு என்னைப் பிடிக்கணும்னு! அப்போ எனக்குத் தெரியலே அவனை எனக்கு பிடிச்சு இருந்தனால்தான் அப்புடி வேண்டுனேன்னு!
தம்பி பஸ் ஸ்டாப் வரைக்கும் போய் இருக்கான் அவங்களை கூபிட்டுடு வர்றதுக்கு...எனக்கு ஒரே பயமா இருந்தது !
என்னோட ரூம்ல இருந்துப் பார்த்தா வெளிய வர்றவங்க தெரியும்... தம்பி கூட அவன் எதோ பேசிட்டு நடந்து வந்துட்டு இர்ருந்தான்... கொஞ்சம் சுமார்தான்!ஆனாலும் பிடிச்சு இர்ருந்தது! ஒரே ஒரு வினாடி பார்த்துட்டு அம்மா கூபிட்டாங்கன்னு உள்ளே போயிட்டேன்!
அப்பா கூப்பிட்டு காபி குடுக்க சொன்னாரு... அவன் காபி எடுக்கும் போது "Thanks"- ன்னு சொன்னான்...எனக்கு சிரிப்பா வந்தது...
அப்புறம் நான் உள்ளே வந்துட்டேன்! ஆனா ஏன்டா அங்கே இர்ருந்து வந்தோம்ன்னு இர்ருந்தது! திரும்பவும் அப்பா கூபிடமாட்டாரானு இருந்துச்சு!
கொஞ்சம் கூட கூச்சமே படாம பொசுக்குனு உங்கப் பொண்ணு ரொம்பப் பிடிச்சு இர்ருக்குனு சொல்லிட்டான்!என்ன இன்னும் கொஞ்சம் நிறைய பேரைக் கூப்புட்டு வந்து இர்ருந்தா எல்லோருக்கும் காபி குடுக்க கொஞ்சம் நேரம் அதிகம் ஆகி இர்ருகும்னு சொன்னான்!
"சைந்தவி மா இங்கே வாடா இங்கே வந்து கொஞ்சம் உக்காருப்பா" அப்பாதான் கூபிட்டு அவருக்கு எதிரிலே உக்கார வச்சாரு...எனக்கு என்னமோ போல இர்ருந்துச்சு... அவனை நிமிந்துப் பாக்கவே முடியலே..என்னனமோ பேசிட்டு இர்ருந்தாங்க அப்பாவும் அவரும்... அப்பாவுக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சுன்னு அவங்க நிச்சயதார்த்தம் கல்யாணம்னு பேசுரப்பவே புரிஞ்சுப் போச்சு... ஒரு மணிநேரத்துல எங்க வீட்டுல இர்ருந்த எல்லார் மனசையும் கொள்ளை அடிச்சிட்டுப் போய்ட்டான்!
அவங்க போனதுக்குப் அப்புறம் அப்பா அவரைப் பத்தியே பேசிட்டு இர்ருந்தாறு.எனக்குதான் ஒரு சந்தோசப் புயல் அடிச்சு ஒன்ஜமாதிரி இர்ருந்தது... உள்ளே ஓடிப் போய் அவன் போட்டோ எடுத்துப் பார்த்துகிட்டேன்..... பெரியப்பாவுக்குப் போன் பண்ணி வரச்சொன்னாங்க அன்னைக்கு ஈவ்னிங்கே எல்லோரும் கிளம்பி மாப்பிள்ளை வீடு பாக்கப் போய்ட்டாங்க! அப்பா அதுக்குள்ளே பெயர் பொருத்தமெல்லாம் பார்த்துட்டு வந்துட்டாரு...8 பொருத்தம் இர்ருகு பண்ணலாம்னு சொன்னதா சொன்னாரு... மீதி நாலு பொருத்தம் எங்கே போச்சுன்னு எனக்கு ஒரே கவலையா இருந்துச்சு!
தம்பிகிட்டே மூணு நாலுதடவை திரும்பத் திரும்பக் கேட்டானாம் உங்கக்காக்கு என்னை பிடிச்சு இர்ருக்கானு... தம்பி வீட்டுக்கு வந்து கிண்டல் அடிச்சான்! லூசு லூசு அதுக்கு அவன் என்கிட்டேயே நேரடியா கேட்டு இருக்கலாம்!
அடுத்த நாளு ஆடி மாசம்கரதால ஆவணி ஒன்னு நிச்சயம் பண்ணிக்கலாம்னு சொல்லிட்டாங்க...எனக்கு கொஞ்சம் வருத்தமாவும் நிறைய சந்தோசமா இர்ருந்தது...அவன் பெங்களூரு போயிட்டதா அப்பா சொன்னாங்க!ஊருக்கு கிளம்புற அன்னைக்கு அப்பா மொபைலுக்கு மெஸ்சேஜ் பண்ணி இர்ருந்தான்!என்னமோ மிஸ் பண்ணுன மாதிரி இர்ருந்தது!
ஒரு 10-15 நாளுக்கு அப்புறம் அப்பா ஒரு sms அனுப்பி வச்சாரு நைட்டு மூணு மணிக்கு அப்பாவோட மொபைலுக்கு வந்ததா..."LOV U sainthavi- MIss U lot" னு...பொறுக்கி பொறுக்கி கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம அவரு மொபைலுக்கே அனுப்பி வச்சு இர்ருக்கான்!... பாவம் அவனுக்குதான் என்னோட நம்பர் தெரியாதேன்னு அப்புறமா தோனுச்சு சரின்னு அப்பா மொபைல்ல இர்ருந்து என்னோட நம்பர் அனுப்பி வச்சேன்!
"hello நாங்க ICICI bank -ல இர்ருந்து பேசுறோம் நீங்க கட்டவேண்டிய study loan balance இன்னும் கொஞ்சம் இர்ருக்கு எப்போ கட்டப் போறீங்க"