Monday, May 16, 2011

After life -3


This Song
is Dedicated To the only one whom i loves the ever-most in this world!

உன்னை சந்தித்தப் பின்தான்...
சந்தோசத்தின் விலாசம் அறிந்தேன்!
நீ எனை விடுத்துப் போனாய்
நான் சவமானேன்!

கொள்ளைக்காரி - என்மனதை!
திருடி - என்கனவுகளை!
ரவுடி - எனுடமைகளை!
என்று எனதெல்லாமையையும்
களவு கொள்வதால் நீ ஒரு 420!

காதல் சாதி மதம் ஒழிக்குமா
என்பது அறியேன்
ஒன்று மட்டும்
நிச்சயம்...
என்னைப் போன்ற அனாதைகளை,
நிச்சயம் ஒழிக்கும்...
எண்ணிக்கையை குறைக்கும் பொருட்டு
குறைந்தபட்சம் சாகடிக்கும்!

உன்னை நேசிக்க
மட்டும் கற்றுக்கொடுத்துவிட்டு...
"தூர நில்" என்றாய்!
என் மீது பிண நாற்றம்
அடிக்கத் துவங்கியது!

எனக்கு அழுவதற்கு மட்டும்
கற்றுக் கொடுத்தப் பின்
நான் அழவேக் கூடாது என்று
உறுதிமொழியும் பிடுங்கிப்போனாள் !

என் உடல், பொருள், ஆவி
அனைத்தும் அவள்...
இப்பொழுது வெறும்
பிணம் மட்டும் மி[எ]ச்சமாய்
என்னிடத்தில்!

"என்னமோ ஏதோ" -
அவள் அழைப்புக்கென
நான் வைத்துகொண்ட
DialerTune - ம்,
அவள் அழைப்பை எதிர்ப்பார்த்து
ஏமாந்து....

ஒருவேளை இந்த கவிதைக்கும்
அவள் வந்து கருத்துப்
பதிவிடலாம்...
யார்கண்டார்?
என் சாவுக்கும்
வந்திருந்து மொய் வைத்துப்
போவாள் அவள்!

இப்பொழுதெல்லாம்
என் கவிதைகள்
காதலைச் சுட்டுவதைக்காட்டிலும்,
கல்லறையின் முகவரி
உள்ளடக்கியேப் பிறக்கின்றன...
காலாவதியானதால்!

நீயும் நானும் சந்திக்கும் வரை
வெட்டியாய் இருந்த காதல்,
எனை; நீ பிரிந்தப்பின்...
எனக்கு வெட்டியானாய்ப் போனது!

காதல் எனைத்
தூக்கிலிட்டு,
கழுத்தைவெட்டி,
நஞ்சூட்டிப் பின்
எரித்துப்
புதைத்தது!

-- கண்ணீருடன் வினு

3 comments:

Chitra said...

இப்பொழுதெல்லாம்
என் கவிதைகள்
காதலைச் சுட்டுவதைக்காட்டிலும்,
கல்லறையின் முகவரி
உள்ளடக்கியேப் பிறக்கின்றன...
காலாவதியானதால்!


..... எத்தனை சோகம்!!!!!!!! யம்மாடி!

vinu said...

Chitra said...

..... எத்தனை சோகம்!!!!!!!! யம்மாடி!


thanks solla mudiyaatha nilaiyil irrukean sister... sorry!

"தாரிஸன் " said...

யப்பா சோகம் தாங்கல...